பின் செல்ல
அரச சேவையை மேம்படுத்தல்

இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு ஏற்ற டிஜிட்டல் இலங்கை

எதிர்கால அரசாங்கத்தின் கீழ், பொதுமக்கள் சேவை வழங்கலை மேம்படுத்துதல், அபிவிருத்தி இலக்குகளை துரிதப்படுத்துதல் மற்றும் நல்லாட்சியை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு (DPI) உருவாக்கப்படும்.

  • டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு (DPI) பூர்வாங்க முயற்சியின் கீழ், அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடியவாறு இலக்கமொன்று வழங்கப்படும். இதன் மூலம், பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள், கடவூச்சீட்டுகள் மற்றும் முக்கியமான ஆவணங்களின் உறுதிப்படுத்திய பிரதிகளைப் பெறுதல் போன்ற தற்போது சிரமமான நிலையில் உள்ள சேவைகளை வெறும் பொத்தானை அழுத்துவதன் ஊடாக பெறும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் வினைத்திறன் உறுதி செய்யப்படும்.
  • அரசாங்கம் மற்றும் பிரஜைகளுக்கு இடையிலும், அரச நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு இடையிலும் தரவு இயக்க வசதியை வழங்கும் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு 2 ஆண்டுகளுக்குள் செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வரப்படும். இலங்கையை பணமில்லா பரிவர்த்தனைகளை நோக்கிய நவீன சமூகமாக மாற்றும் வகையில் டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் முறை நிறுவப்படும்.
  • முழு இலங்கை அரச நிறுவன முறைமையையும் உள்ளடக்கும் வகையில் இலங்கை அரச வலையமைப்பு மற்றும் இலங்கை அரச மேகக்கணினி சேவையை விரிவுபடுத்திஇ அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் சிறந்த சேவையை வழங்க முடியும் என்ற வகையில் அதனை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்துதல்.
  • 3 மாதங்களுக்குள் இலங்கையில் முழுமையான சைபர் பாதுகாப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • 2022 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு ஒழுங்குவிதிகளை வகுத்தல் மற்றும் தேவையான வசதிகளை வழங்குதல்.
  • புதிய ஆரம்ப வியாபாரங்களை மேம்படுத்துவதற்காக, தனியார் துறையின் பங்களிப்புடன் ஒரு அபிவிருத்தி நிதியை  ஏற்படுத்துதல்.
  • இலங்கையில் தகவல் தொழிநுட்ப வணிகங்களின் வளர்ச்சிக்கும் வினைத்திறனுடன்  பிரஜைக்கான சேவைகளை வழங்குவதற்கும் இடையூறாக உள்ள அதிவேக இணைய வசதிகள் (High-speed Internet facilities)கிடைக்காமையின் சிக்கலைத் தீர்த்தல் இந்த அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகக் கருதப்படும்.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் வணிகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற வரிகளை நீக்கி, நாட்டின் வளர்ச்சிக்கு அந்தத் துறையின் தனித்துவமான பங்களிப்பை அங்கீகரித்து, அந்தத் துறை தொடர்பாக நியாயமான மற்றும் கவர்ச்சிகரமான வரிக் கொள்கையை அறிமுகப்படுத்துதல்.
  • தகவல் தொழில்நுட்ப வர்த்தகங்களுக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இலத்திரனியல் உபகரணங்களுக்கான வரிகளை குறைத்தல்.
Download Digital Transformation Charter

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்