பின் செல்ல
அரச சேவையை மேம்படுத்தல்

அரசாங்க சேவை

  • முழு அரசாங்க சேவையையும் உள்ளடக்கிய விரிவான மனித வள கணக்காய்வை மேற்கொண்டு, மனித வள முகாமைத்துவ திட்டத்தின் அடிப்படையில் முழு அரசாங்க சேவையையும் மறுசீரமைத்தல்.
  • மிகவும் திறமையான மற்றும் ஆற்றல்மிக்க நபர்களை மூலோபாய ரீதியாக நிலைப்படுத்துவதை உறுதிசெய்து, அரச சேவையின் அனைத்து ஆட்சேர்ப்புகள், நியமனங்கள் மற்றும் நிலைப்படுத்துதல் தேர்ச்சி அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
  • அரச சேவையின் செயல்திறனை தரப்படுத்துதல் மற்றும் செயலாற்றுகை மதிப்பீட்டு இலக்குகளின் அடிப்படையில் அரச சேவையை தொடர்ந்து மதிப்பீடு செய்தல். தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அரச சேவையில் பயிற்சி நடவடிக்கைகளுக்காக நிதியை முதலீடு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். சர்வதேச தரத்துடன் சிவில் சேவை கல்விப் பீடத்தை நிறுவுவதன் மூலம் சிவில் சேவை பயிற்சி நிறுவனங்களை தர்க்கரீதியாக மேம்படுத்துவோம்.
  • அரசு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுப் படி உயர்வு: எமது அரசாங்கம் தகுதியான அனைத்து அரசதுறை ஊழியர்களுக்கும் வழங்கப்படும் மாதாந்த வாழ்க்கைச் செலவுப் படியை தற்போதைய ரூ. 17,800 வரம்பிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 25,000 வரை உயர்த்துவதுடன்  இது தற்போதைய படிகளுடன் சீராக்கப்படும்.
  • அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள உயர்வு: அரச சேவைக்கான குறைந்தபட்ச அடிப்படை மாதச் சம்பளம் (தற்போதைய தர விகிதங்களின் அடிப்படையில்) 24% உயர்த்தப்படும். இந்த சீராக்கலில் தற்போது அனுபவிக்கும் பல்வேறு சீராக்கல்கள் மற்றும் படிகளுக்கான சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் அடங்கும். மேற்கண்ட இரண்டு சீராக்கல்களும் சேர்ந்து, வாழ்க்கைச் செலவுப் படி உட்பட அரச சேவையின் குறைந்தபட்ச தேறிய சம்பளம் ரூ. 57,500 ஆக இருக்கும்.
  • 2016 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளால் புதிய அரச ஊழியர்களின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, நாங்கள் முன்னைய முடிவை இரத்து செய்து, 2016 முதல் நியமிக்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதிய விதிமுறைகளின்படி அவர்களின் ஓய்வூதியத்தை வழங்க முன்மொழிகிறோம். அதன்படி அவர்களின் நியமனங்கள் மாற்றப்படும்.
  • அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அவர்களின் தகுதிகள், திறன்கள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் அரசாங்க சேவையில் பொருத்தமான மாற்று பதவிகளுக்கு மாற்றப்படுவார்கள். தற்பொழுது அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் அவர்களது தொழில்திறனை விருத்தி செய்து கொள்வதற்கும் அவர்களது விருப்பத்தின் பேரில் தொழில் சந்தையில் போட்டியிடும் வகையில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்குப் பொருத்தமான தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும்.

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்