பின் செல்ல
அரச சேவையை மேம்படுத்தல்

திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கம்

  • கொள்கை திட்டமிடல் மற்றும் அமுலாக்கத்திற்கான அமைச்சரவை அமைச்சு மீண்டும் நிறுவப்படும். இந்த அமைச்சு கொள்கை உருவாக்கம், கொள்கை புதுப்பித்தல் மற்றும் கொள்கை அமுலாக்கத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்குப் பொறுப்பாக இருக்கும்.
  • இந்த கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் அமுலாக்கத்தை உறுதி செய்ய முழு அதிகாரம் பெற்ற புத்திஜீவிகள் தொழில்முறை வல்லுநர்களைக் கொண்ட "கொள்கை அமுலாக்க ஆணைக்குழு" ஒன்றை நிறுவுவோம். இந்த ஆணைக்குழுவின் பங்கு இந்தக் கொள்கைகளுக்கான அமுலாக்க இலக்குகளை நிர்ணயித்தல், முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல், பின்னடைவுகளை ஆய்வு செய்தல் மற்றும் தீர்வுகளைப் பரிந்துரைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். தேர்தல் வாக்குறுதிகளின் அமுலாக்க முன்னேற்றத்தைக் காட்டும் வருடாந்த அறிக்கையை ஆணைக்குழு வெளியிடும்.

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்