நீண்டகால நிலைத்தன்மைக்காக, இலங்கையின் ஓய்வூதிய முறையை முற்றிலும் மறுசீரமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இது அரச ஊழியர்கள்இ தனியார் துறை ஊழியர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அனைத்து குடிமக்களும் அணுகக்கூடிய உலகளாவிய, (Universal) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதை உள்ளடக்கியது. அரச ஊழியர்கள் பங்களிப்பு செய்யாமல் ஓய்வூதியம் பெறும் தற்போதைய மாதிரி நிதி ரீதியாக நிலையானது அல்ல.
அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடிய பிறகு தனியார் துறை ஊழியர்களுக்கு மாதாந்தம் ரூ. 17,500 எல்லையிலிருந்து குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ. 25,000 வரையாவது திருத்தியமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
"ஜன சவிய", "சமுர்த்தி", "அஸ்வெசும", "கெமிதிரிய" ஆகிய சமூக பாதுகாப்பு திட்டங்களின் சிறந்த நடைமுறைகளை பயன்படுத்தி, விரிவான புதிய திட்டத்தை உருவாக்கி, வறுமையை வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்றுவோம். புதிய திட்டத்தின் மூலம் மாதாந்த பயனாளி குடும்பங்களுக்கு 24 மாதங்கள் வரை ரூ.20,000 உதவித்தொகை வழங்கப்படும். புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் வரை, அஸ்வெசும பலன்கள் தொடர்ந்து வழங்கப்படும். இந்த புதிய திட்டம் நேரடி பண வழங்கலுக்கு மட்டுப்படுத்தப்படாமல், பயனாளி குடும்பங்களின் நுகர்வு சேமிப்பு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி, அறிவு, தேர்ச்சி மற்றும் மனப்பான்மைகளை மேம்படுத்தும் திட்டமாக இருக்கும்.
அபாயத்திற்கு உள்ளான மற்றும் இடம்பெயர் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 10,000 (ரூ. 5,000 இலிருந்து) வரை
ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 10,000 (ரூ. 8,500 இலிருந்து) வரை
மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதம் ரூ. 15,000 விகிதம்
இந்த புதிய திட்டம் நேரடி பண உதவிக்கு மட்டும் வரையறுக்கப்பட மாட்டாது என்பதுடன் பயனாளி குடும்பங்களின் நுகர்வு, சேமிப்பு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் அறிவு, தேர்ச்சி மற்றும் மனப்பான்மைகளை மேம்படுத்தும் ஒரு திட்டமாகும்.
இலங்கையின் வறுமை ஒழிப்பில் சமுர்த்தி திட்டத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய பங்களிப்பை அடையாளம் கண்டு, புதிய நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை, தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தில் பயனாளிகளை தவறாக இலக்கு வைப்பதை நிவர்த்தி செய்ய அறிவியல் ரீதியான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். இது தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தில் அநியாயமாக விலக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கும், பொருளாதார நெருக்கடியால் வறுமைக்கு தள்ளப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்குவது உறுதி செய்யப்படும். சமுர்த்தி வங்கிகளின் மூலதனம் வலுப்படுத்தப்படும். இதில் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், ஊழியர்களுக்கு நிலையான தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், கட்டாய சேமிப்புத் திட்டம் மற்றும் வீடமைப்பு லொத்தர் சீட்டிழுப்பு போன்ற பயனுள்ள திட்டங்கள் தொடர்ந்தும் பேணப்படும். மேலும்இ சமுர்த்தி ஊழியர்களின் நீண்டகால முகாமைத்துவம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.
எமது பொருளாதாரத்தில் எப்போதும் செயலில் உள்ள சமூகங்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காகஇ QR குறியீடு அடிப்படையிலான திட்டத்தின் மூலம் விசேட எரிபொருள் மானியம் வழங்கப்படும். இந்த உதவி விவசாயிகள், "சக்தி" அரிசி ஆலை உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், மீனவர்கள், மற்றும் பாடசாலை போக்குவரத்துப் பிரிவு சாரதிகளுக்கு வழங்கப்படும்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.