குறைந்த வருமானம் மற்றும் நடுத்தரவர்க்க வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு அரசுக்குச் சொந்தமான காணிகள் வழங்கப்படும்.
அரசாங்கத்தால் நெறிப்படுத்தப்பட்டு பூர்த்தியடையாத வீட்டுத்திட்ட நடவடிக்கைகளை துரிதமாகப் பூர்த்தி செய்து அனைவருக்கும் நியாயமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக புதிதாக உருவாக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட வீட்டுவசதித் திட்டத்தில் கிராமப்புற, நகர்ப்புற, மலைநாட்டு, பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீனவ சமூகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் நிர்மாணிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள அதிக வரியை நீக்கி கட்டுமான செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்களது முதல் வீட்டு அலகை வாங்கும் அல்லது வீடு கட்டுவதற்கான முதல் காணியை வாங்கும் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் நீண்ட கால கட்டண விருப்பங்களுடன் விசேட வீட்டுக் கடன் திட்டம் (இரண்டு தலைமுறை கடன்) அறிமுகப்படுத்தப்படும்.
மின்சாரம், பெற்றோலியம், எரிவாயு மற்றும் நீர் உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளின் ஒழுங்குமுறைகளை உறுதி செய்ய இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) வலுப்படுத்தப்படும்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.