இலங்கைக்கான தனித்துவமான டிஜிட்டல் அடையாள முறை அமுல்படுத்தப்பட்ட பின்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கான வீடு கட்டும் பொருட்களுக்கு வரி விலக்கு திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தும். வெளிநாட்டு பண அனுப்பீடுகளின் அடிப்படையில் மின்சார வாகனங்களுக்கான வாகன உரிமங்களை வழங்குவதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள நிறுவனமாக மாற்றுவதற்கு தேவையான சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
வெளிநாடு வாழ் தொழிலாளர்கள் வெளிநாட்டில் இருந்து வாக்களிக்க ஏதுவாக தேர்தல் சட்டம் திருத்தப்படும்.
மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது இலங்கைக்கு திரும்ப முடியாத கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்கு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தனியார் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் பங்களிப்பு காப்புறுதித்திட்டம் மற்றும் விசேட வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
வீட்டு வேலைகளை ஒழுங்குபடுத்த சட்டங்களை இயற்றுதல், சேவை நிலையத் துன்புறுத்தலை நிவர்த்தி செய்தல், தொடர்புடைய சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஒப்பந்தங்களை அங்கீகரித்தல் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழில் உத்தியோகத்தர்களின் மேற்பார்வையை அதிகரித்தல்.
குறுகிய கால வேலைகளைக் கொண்ட சுதந்திர சந்தை அமைப்பின் (Gig economy) சுய தொழில் செய்பவர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களின் உரிமைகளும் பாதுகாப்பு வலைகளும் வலுப்படுத்தப்படும். புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி, பங்களிப்பு சேமிப்புத் திட்டத்தையும் அறிமுகப்படுத்துவோம்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.