2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் உள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான உட்பிரிவுகளை நீக்கி, இணைய சேவை வழங்குநர்கள் தங்கள் வணிகங்களைத் தடையின்றி நடத்த அனுமதிக்கும் சட்டமூலம் அறிமுகப்படுத்துவது புதிய அரசாங்கத்தின் முக்கிய பணியாகும்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத் துறைகளில் உள்ள அனைத்து தரப்புகளின் நலன்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கும், ஊடகங்கள் தொடர்பான கொள்கை முடிவுகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதற்கும் ஒரு சுயாதீனமான தேசிய ஊடக ஆணைக்குழு நிறுவப்படும்.
பிரதேச ஊடகவியலாளர்கள் உட்பட ஊடகவியலாளர்களின் தொழில் நிலைத்தன்மையைப் பாதுகாக்க தேவையான சட்டப் பாதுகாப்பை வழங்க புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் இயற்றப்படும்.
பிரித்தானியாவின் BBC ஒளிபரப்பு நிறுவனத்தின் நிர்வாக மாதிரியை பின்பற்றி, நேரடி பாராளுமன்ற பதிலுக்கு கட்டுப்பட்ட வகையில் "நம்பிக்கைப் பொறுப்பு" இன் கீழ் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.