பின் செல்ல
வாழ்க்கைத் தரத்தை பாதுகாத்தல்

மலையக மக்கள்

இரண்டு நூற்றாண்டுகளாக மலையக தமிழ் சமூகம் இலங்கைக்கு வழங்கிய பெரும் பங்களிப்பை நாம் அங்கீகரிக்கிறோம். அவர்கள் அனுபவித்த கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பைக் கருத்தில் கொண்டு, இந்தச் சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்த நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் உணர்கிறோம். இதற்காக பின்வரும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்:

  • விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளைக் கொண்ட தேசிய பாடசாலைகளை நிறுவுவது உட்பட இலக்கு நோக்கிய திட்டங்கள் மூலம் அனைத்து நிலைகளிலும் மலையக மாணவர்களின் கல்வி சாதனைகளை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
  • விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை மற்றும் கணிதம் (STEAM) ஆகிய பாடங்களில் ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக தமிழ் மொழி மூலமான மேலதிக கல்வியியல் கல்லூரி மற்றும் தாதியர் பயிற்சி நிறுவனத்தை நிறுவுதல்.
  • இலங்கை மலைநாட்டுப் பல்கலைக்கழகம் (HUSL) என்ற உத்தேச பெயரில் முழுமையான பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முதல் படியாக தற்போதுள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஹட்டன் பகுதியில் வளாகம் ஒன்றை ஆரம்பித்தல்.
  • மலையக இளைஞர்களுக்கான இலக்கு நோக்கிய மற்றும் அணுகக்கூடிய தொழிற்பயிற்சி திட்டங்களை உருவாக்குதல்.
  • தோட்டத்துறையின் அனைத்து சுகாதார வசதிகளையும் தேசிய சுகாதார அமைப்புகளுடன் ஒருங்கிணைத்தல்.
  • குழந்தைகளிடையே குள்ளமான தோற்றம், இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே இரத்த சோகை, குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதம் ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக இலக்கு நோக்கிய உதவித் திட்டத்தை செயல்படுத்துதல்.
  • தோட்டப்புற சமூகங்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டம் நியாயமான மற்றும் நீதியான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
  • தோட்டத் தொழிலாளர்களை காணிக்குச் சொந்தமான சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான அரசாங்கக் கொள்கையை அறிமுகப்படுத்தி அமுல்படுத்துதல்.
  • இந்த இடம்பெயர் காலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு முறையான சம்பளத்தை உறுதிப்படுத்தல்.
  • பயிர்ச்செய்கை நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு மற்றும் தொழில்முனைவர் நடவடிக்கைகளுக்காகத் தோட்டங்களுக்குள் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டங்களைச் சார்ந்த குடியிருப்பாளர்களுக்கு பகிர்ந்தளித்தல். தோட்டப் பகுதிகளில் குடியிருப்பவர்கள் தற்போது பயிர் செய்து கொண்டிருக்கும் காணிகளுக்கு அரசாங்கத்தின் கொள்கை முறைப்படி உறுதிகளை வழங்கல்.
  • மலையக தோட்டப்புற சமூகங்கள் போதுமான அளவில் உள்ளடக்கப்படாத பகுதிகளில்இ ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் கொள்கைக்கு இணையாக அரச வேலைவாய்ப்புக்கான நேர்மறையான செயல் திட்டத்தை செயல்படுத்துதல். இதன்படி, தோட்டப்புறப் பகுதிகளில் புதிய கிராமங்களை நிறுவுதல் மற்றும் NEVIDA க்கு அதன் விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான வளங்களை வழங்குதல். புதிய கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலக எல்லைகளை வரையறுத்து, தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட உரிமையாளர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு முழுமையான பிரஜையாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்கும் பரவலாக்கப்பட்ட அரச சேவைகளுக்கு சமமாக பிரவேசிக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்தல்.
  • தோட்டங்களைச் சார்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான உறுதிகளுடனான காணிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுத்தல். குறித்த காணிகள், வீதிகளுக்கு எளிதான செல்லக் கூடிய இடங்களில் உள்ளதாக இருக்கும் என்பதுடன் பகிர்ந்தளிக்கப்படும் காணியின் பரப்பளவு, அந்த பிரதேச செயலாளர் பிரிவில் மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட நிலப்பரப்புக்கு சமமாக இருக்கும்.
  • பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்த நம்பிக்கைப் பொறுப்பு (PHDT), தேசிய வீடமைப்பு அதிகாரசபை (NHDA) மற்றும் பிற அரசாங்க திட்டங்களின் கீழ் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு உரித்து உறுதிகளை வழங்குவதன் மூலம் அவற்றை ஒழுங்குபடுத்தல்.
  • நகர மையங்களுக்கு இடம்பெயரும் தமிழ் மக்களை குறைந்த வருமான வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு வலையமைப்பு திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல் மற்றும்  இந்த குடும்பங்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு  இடமளிக்கும் வகையில் அந்தந்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் வளங்களை மேம்படுத்தல்.
  • வினைத்திறனான மற்றும் தர்க்கரீதியான அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதற்காக, தோட்டப்புறப் பகுதிகளில் உள்ள உள்ளுராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கையை மீளாய்வு செய்வோம்.
  • மலையக மக்களின் பரவலான வாழ்விட முறையைக் கருத்தில் கொண்டு, அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட தேவையான ஆலோசனை மற்றும் நிறைவேற்று அதிகாரங்களுடன், மலையக தமிழ் சமூகத்தின் கலாச்சார, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் சட்ட மூலங்கள் மற்றும் சட்டங்களை கண்காணித்து ஆய்வு செய்ய அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையில் அரசாங்க நிறுவனமாக நிலத் தொடர்பற்ற சமூக சபையை (Non-Territorial Community Councils)  உருவாக்குதல்.

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்