அனைத்து துறைகளிலும் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறோம், மேலும் வளர்ச்சி செயல்முறையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம். (திருத்தப்பட்ட) 1980 தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் பிற சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் புதுப்பிக்கப்படும்.
சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், Pump Storage, அலை மின்சாரம், பசுமை ஐதரசன், Bio-mass உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்களை ஊக்குவிப்பதன் மூலமும், பரிமாற்ற முறைமையில் சுற்றாடலுக்கு உகந்த மாற்று வலுசக்தி ஆதாரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், புவி வெப்பமடைதல் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் உள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைவாக செயல்பட முன்னுரிமை அளிக்கப்படும்.
அடிக்கடி மக்களுடன் மோதும் யானைகள், குரங்குகள், மயில்கள் மற்றும் பிற விலங்குகளின் மீது கவனம் செலுத்தி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல்களைத் தணிக்க அறிவியல் அடிப்படையிலான, சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான தீர்வுகளை செயல்படுத்த எமது அரசாங்கம் உறுதிபூணும்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.