தொலைநோக்கு மற்றும் வலுவான வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
தேசிய பாதுகாப்பு சபையை நிறுவி அதற்கு தேவையான அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டம்.
நாட்டின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் ஒருங்கிணைப்புடன் தனித்தனியாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் அலகுகளாகக் கருதப்படும். இந்த கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைந்த புலனாய்வு கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் அரசு புலனாய்வுப் பிரிவுக்கு கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு அங்கீகாரம் வழங்கப்படும். இந்த ஒருங்கிணைப்பு அணுகுமுறை தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தும், செயல்பாடுகளை திறமையாக்கும், ஒவ்வொரு பிரிவின் சுயாதீனத்தை பராமரிக்கும் அதே வேளையில் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும். இந்த கட்டமைப்பு சுயாதீன நிறுவனங்களுக்கிடையே திறமையான ஒத்துழைப்பை உறுதி செய்து, வலுவான மற்றும் பதிலளிக்கக்கூடிய தேசிய பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்கும்.
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியவற்றிற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள், நவீன ஆயூதங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் போதுமான உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளை வழங்குதல். முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் தொழில் பாதுகாக்கப்படும். அவர்களுக்கு கூடுதலான சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரி நன்மைகள் வழங்கப்படுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
நிறுவன சீர்திருத்தத்தின் மூலம் இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு ஏற்றவாறு ஆயுதப் படைகளை நவீனமயமாக்கல்.
அனைத்து இன மற்றும் மத குழுக்களுக்கும் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கும் வகையில் செயல்படுதல் அனைத்து இனமும் சமூகத்தில் இருந்து வெளிப்படும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையிலான பாதுகாப்பை உறுதி செய்தல்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.