சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவாக செயல்படுத்த தேவையான வசதிகளும் பயிற்சியும் வழங்கப்படும்.
வழக்குத் தொடுப்பதன் சுதந்திரம் மற்றும் திறனை உறுதி செய்ய சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் நிறுவப்படும்.
ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் சட்டமூலம் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும். ஊழல் செயல்களால் பெறப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பது விரைவாக மேற்கொள்ளப்படும்.
தற்போது நிறுவப்பட்டுள்ள நிரந்தர மூவரடங்கிய ஊழல் எதிர்ப்பு மேல் நீதிமன்றங்களை மீண்டும் பலப்படுத்தி இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை நாள்தோறும் (Day-to-day trials) தாமதமின்றி நடத்த தேவையான சூழ்நிலை உருவாக்கப்படும்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.