பின் செல்ல
தேசியப் பாதுகாப்பு

சட்டம் மற்றும் ஒழுங்கு

  • ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 2 (1) (இ) இன் படி முறையான அதிகாரம் பெற்ற விசாரணை ஆணைக்குழு  3 மாதங்களுக்குள் நிறுவப்படும். ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு  மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தால் (Trial at bar) நாளாந்தம் வழக்கை விசாரணை செய்து தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகக் கருதப்படுகிறது.
  • முன்னைய அரசின் இறப்புக்குப் பின்னரான தகனம் செய்த கொள்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகளின் மூலம் அவர்களை பொறுப்புக்கூற வைத்தல்.
  • பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்து, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சிறந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நிறுவுதல்.
  • சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICPPR) அதிகாரிகளால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தேவையான சட்ட திருத்தங்களைச் செய்தல். வெறுப்புப் பேச்சுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சட்டப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
  • நீதியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் சட்ட தாமதங்களைக் குறைப்பதற்கும் 5 ஆண்டுகளுக்குள் நீதித்துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.
  • இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மேலும் பலப்படுத்தப்படும் மற்றும் அனைத்து வகையான வழக்குகளுக்கும் குடிமக்களுக்கு சட்ட உதவி வழங்குவது உறுதி செய்யப்படும்.
  • பிரதேச செயலகங்களில் ஒவ்வொரு மத்தியஸ்த சபைக்கும் தனியான நிரந்தர அலுவலகம் நிறுவப்பட்டு போதிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு நிரந்தர ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.
  • அரசியல் காரணங்களுக்காக மீளப் பெறப்பட்ட குற்றவியல் வழக்குகள் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 03 மாதங்களுக்குள் மீளவும் அந்த வழக்குகள் தொடுக்கப்படும். நீதிமன்றத்தால் பொறுப்புக்கூற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டவர்களால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அநியாயமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்குவோம்.
  • 150 வருடங்களுக்கும் மேலான பழைமை வாய்ந்த பொலிஸ் கட்டளைச் சட்டத்தை புதுப்பித்து, பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களை விரைவாகவும் நியாயமான முறையிலும் மேற்கொள்ளுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தேவையான போதுமான வசதிகள் வழங்கப்பட்டு, பொலிஸ் சேவையை சர்வதேச தர வரிசைக்கு கட்டி எழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாடு முழுவதும் 119 அவசர அழைப்புகளுக்கு 30 நிமிடங்களுக்குள் பொலிஸ் திணைக்களம் பதிலளிப்பதை உறுதி செய்வதற்கு தேவையான வளங்கள் வழங்கப்படும் என்பதுடன், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கல். பொலிஸ் திணைக்களம் தற்போதையையும் விட  பொதுமக்களுக்கு ஏற்ற, வேகமான சேவையை வழங்க சாத்தியவளங்கள் கிடைக்கக்கூடியவாறு டிஜிட்டல்மயமாக்கப்படும்.

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்