எமது அரசாங்கம் பலதரப்பு வெளிநாட்டுக் கொள்கையுடன் கூடிய சுயாதீனமான ஒரு அரசாங்கமாக இருக்கும். எமது தூரநோக்கு அனைவருடனும் நட்பைப் பேணுதல், எவருடனும் பகைமை கொள்ளாதிருத்தலாகும்.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்வதேச விதிமுறைகளால் நிர்வகிக்கப்படும் உலக ஒழுங்கை ஊக்குவிக்கும் பல்தரப்பு கொள்கையாகும். இதில் உள்ள முக்கிய கோட்பாடுகளின் பலத்தைப் பயன்படுத்தாமை, அமைதியான முறையில் மோதல்களைத் தீர்த்தல் மற்றும் மனித உரிமைகளைக் கடைப்பிடித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
- இராணுவக் கூட்டணிகள் இல்லாமல் உடனடி மற்றும் பிராந்திய அண்மைய நாடுகளுடன் அமைதியான சகவாழ்வு, பிராந்திய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதில் முன்னணி வகிப்பது ஆகியவை அடிக்கல்லாக இருக்கும்.
- இலங்கை அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாக ஈடுபடும்இ மேலும் பொருளாதார இராஜதந்திரம் கொள்கை உருவாக்கத்தின் மையமாக இருக்கும். எமது பொருளாதார இராஜதந்திர உத்தி உலகளாவிய உற்பத்தி வலையமைப்புகளில் ஒருங்கிணைப்பதற்கும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கும் முதலீடு மற்றும் வர்த்தக தூண்களின் மீது கட்டமைக்கப்படும். உலக சந்தையில் இலங்கையின் நிலையை உயர்த்தும் வகையில், அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதியைப் போன்றதான சமமான வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான விசேட அரச அலகை நிறுவுவதை மையமாகக் கொண்டு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கையொன்றை வகுக்கவுள்ளோம்.
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மக்களின் சிறந்த நலனை உறுதி செய்வதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கை ஊக்குவித்தல்.
- இலங்கை பிராந்திய வர்த்தகக் கூட்டணிகளுக்கு உறுதியளிக்கும்.
- நாங்கள் 75% தொழில்முறை இராஜதந்திரிகள் மற்றும் அதிகபட்சம் 25% தொழில்முறை அல்லாத நியமனங்களின் மாதிரி கலவையை உறுதி செய்வோம். ஆட்சேர்ப்பு செயல்முறை புதுப்பிக்கப்படும், மேலும் அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களை நியமிப்பது தடை செய்யப்படும்.