எந்த வகையிலும் இனவாதம், தீவிரவாதம் அல்லது பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படாது. ஒவ்வொரு குடிமகனும் இனம், மதம், சாதி, வர்க்கம் அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவார்.
இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் தேவையான முறையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம்.
பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போது அனைத்து நிறுவனங்களிலும் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு சட்டத்தை உருவாக்குவோம்.
மதத் தலைவர்கள், பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து முறையாக கருத்துக்களைப் பெற்று, தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி / ஐக்கிய மக்கள் கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த செயல்முறையில், எமது கொள்கை என்னவென்றால், தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதாகும்.
முடிவெடுக்கும் செயல்முறையில் குடிமக்களை செயலில் ஈடுபடுத்த, கிராம அரசு மற்றும் நகர அரசு எனப்படும் சமூக அடிப்படையிலான ஜனநாயக நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன். மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
தேசிய அரசாங்கம் நிறுவப்படும் பட்சத்தில் அமைச்சர்/ பிரதியமைச்சர் /இராஜாங்க அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு ஆற்றலை வழங்கும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் இரத்துச் செய்யப்படும்.
தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டாலும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பிலான வரையறை ஏற்புடையதாக இருக்கும்.
6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்இ மேலும் அதிகபட்ச நிதி, திறன் மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். அரசு ஆதரவுடன் மக்கள் தொகை மாற்றங்கள் செய்யப்படாத கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். மேலும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக முதலீடு செய்ய விசேட சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படும்.
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், சமூக மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நிலைபெறுதகு பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, யுத்தத்தல் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டமைக்கவும் அபிவிருத்தி செய்யவும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதி செய்வதற்கு ஒரு சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்வோம்.
சட்டவிரோதமாக தள்ளிப்போடப்பட்ட உள்ளுராட்சி தேர்தல்களை விரைவாக நடத்த தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுத்தல்.
நீதித்துறை நிர்வாகத்தில் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீட்டைத் தடுக்க சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் செயல்திறனை நிறுவ தேவையான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி, அது சமூக மற்றும் பொருளாதார உரிமைகள், கலாச்சார உரிமைகள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். குடிமக்கள் எளிதாக நீதியைப் பெறும் வகையில், மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணைகள் ஒவ்வொரு மாகாணத்திலும் நடத்தப்படும். இதற்கு அடிப்படை உரிமைகள் மற்றும் மொழி உரிமைகள் தொடர்பான அடிப்படை நீதிமன்ற அதிகாரம் வழங்கப்படும். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியுடன் அல்லது உயர் நீதிமன்றத்தின் விசேட அனுமதியுடன் உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய முடியும்.
எந்தவிதத்திலுமான ஊழல் நடவடிக்கையானது அரசியலமைப்பை மீறுவதற்குச் சமமாகக் கருதப்படும், அதேபோல் ஊழல் எதிர்ப்பு அரசியலமைப்பில் சேர்க்கப்படுவது அரசியலமைப்பு திருத்த செயல்முறையின் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
அரசு சேவையை முழுமையாக அரசியல் மயமற்றதாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை அரசு சேவை ஆணைக்குழுவுக்கு வழங்குதல்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான தரங்களையும் கோட்பாடுகளையும் நிலைநாட்டுவதற்கும் பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் 15.04.2018 முதல் சட்டமாக மாறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கமுறைக் கோவையை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்றம். அதற்கு சமாந்தரமாக மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
அமைச்சர்களுக்கு, நியமனங்கள் வழங்கும்போது, தங்கள் அமைச்சுகளின் அதிகார வரம்பிற்குட்பட்ட அரச மற்றும் பகுதியளவான அரசு நிறுவனங்களில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தற்போது நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஊழல்வாதிகள் எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலுக்கும் வேட்புமனு வழங்கப்பட மாட்டாது. மற்றும் அரசாங்கப் பதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது.
சலுகைகள் மற்றும் அனுசரணைகளின் காரணமாக உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுக்க சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகளை 2 மாதங்களுக்குள் முடிக்க கட்டாயப்படுத்தும் ஏற்பாடுகளை முன்வைத்தல்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.