பின் செல்ல
அனைத்து பிரஜைகளையும் வலுப்படுத்தல்

கல்வி, தொழில்முறை பயிற்சி மற்றும் இளைஞர்கள்

கல்வி என்பது அடிப்படை உரிமை. மனித மூலதன மேம்பாடு எமது முன்னுரிமை.

  • கல்வி என்பது அடிப்படை உரிமை. மனித மூலதன மேம்பாடு எமது முன்னுரிமை.
  • தேசத்தின் மனித மூலதன மேம்பாட்டிற்கு ஆசிரியர்கள் நிறைவேற்றும் முக்கியமான பங்களிப்பை அங்கீகரித்து, அரசாங்கம் இலங்கை முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதிகளை வழங்கும்.
  • கல்வித்துறையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சம்பளம், ஓய்வுதியம் மற்றும் சேவை தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க 2025 ஜனவரிக்கு முன்னர் கொள்கை முடிவுகளை எடுத்து செயல் திட்டத்தை உருவாக்குதல்.
  • இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் 100% மின்சாரம்இ நீர் வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வளங்களை வழங்குவதன் மூலம் ஒவ்வொரு பாடசாலையையூம் ஸ்மார்ட் பாடசாலையாக மாற்றுவதற்கான வழிவரைபடத்தை உருவாக்குதல்.
  • மதத்தைக் கற்பிப்பதற்குத் தேவையான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும். பாடசாலைகளில் மதக் கல்வி கற்பிக்கும் பணி, மதக் கல்வி கற்பிப்பதற்கான தகுதி பெற்ற ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும்.
  • விரிவாக்கப்பட்ட 'பிரபஞ்சம்' திட்டத்தின் மூலம் பாடசாலைகளில் டிஜிட்டல் கற்றல் தளங்களுக்கான அணுகலை உறுதி செய்யும் முன்னுரிமையாக இலங்கையை முன்னோக்கி செலுத்தும் முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்படும். இதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளடக்கங்களை வழங்கும் முறைகளில் முழுமையான நவீனமயப்படுத்தல் மேற்கொள்ளப்படும். தரமான கல்வி சேவைகளைப் பெறும் திறனை அதிகரிக்கும் இந்த திட்டம் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஸ்மார்ட் பாடசாலைகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்க தாராள நன்கொடையாளர்களை ஈர்க்கும் வகையில் 10,096  பாதுகாவலர் பாடசாலைகள் (Foster Schools)திட்டம் உருவாக்கப்படும்.
  • உலகளாவிய கூட்டாண்மைகள், கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான கூட்டு கற்றல் வாய்ப்புகளை வளர்ப்பதற்காக பாடசாலை இணைப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும்.
  • பாடசாலைகளின் வசதிகளைப் பராமரிப்பதற்கும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பிரதேச சமூகத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு பாடசாலையிலும் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் ஒன்று நிறுவுவது கட்டாயமாக்கப்படும்.
  • ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் மூலம் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், அழகியற்கல்வி மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் STEAM கல்வியை உருவாக்கும் பணியை 2025 ஜனவரி  முதல் ஆரம்பித்தல்.
  • பாடசாலை பாடத்திட்டத்தை மறுசீரமைக்கும் போது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையின் மனிதவள நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப போக்குகளுக்கு உரிய இடம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பிள்ளைகள் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபடும் வகையில் எளிமையாக்கி ஒழுங்கமைத்தல்.
  • பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் ஆரம்பக்கல்வியின் அடிப்படை முக்கியத்துவத்தை அங்கீகரித்து, பல்துறை ஆலோசனைக் குழுவுடன் கூடிய ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை நிறுவி, சிறுவர் நட்பு மற்றும் நவீன உட்கட்டமைப்பை அபிவிருத்தி, ஆசிரியர் பயிற்சி மற்றும் அங்கீகாரத்தை மேம்படுத்தி, பெற்றோர் பங்களிப்பையும் ஊக்குவிப்போம்.
  • மாணவர் பாடசாலைப் பருவத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ஆங்கில மொழியை நன்கு புரிந்து கொள்வதற்கும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் தேவையான திறன்களை பெற்றுக் கொள்ளும் வகையில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பாடசாலை கல்வி வழங்கப்படும்இ இதற்காக நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படும்.
  • 6 முதல் 13 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் அனைத்துப் பாடசாலை மாணவிகளும், மாதவிடாய் சுகாதார உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்காக, தங்கள் விருப்பப்படி மாதாந்த நிதிப் பரிமாற்றத்தைப் பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
  • பல்கலைக்கழக துறையில் உள்ள தொழில்முறை பிரச்சினைகளை தீர்க்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை உடனடியாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்தல். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தை சீர்திருத்தி பல்கலைக்கழகங்களின் சுயாட்சியை வலுப்படுத்துதல். அரசு, அரசு சாரா மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை கண்காணிக்க உயர்கல்வி ஆணைக்குழுவை நியமித்தல். அனைத்து அரசு மற்றும் அரசு சாரா பல்கலைக்கழகங்களின் சர்வதேச தரவரிசையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அவற்றின் சர்வதேச அங்கீகாரத்தை உயர்த்துதல்.
  • தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்தி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்/இந்திய முகாமைத்துவ நிறுவனங்கள் (IIT/IIM) போன்ற ஒரு பல்கலைக்கழகத்தை இலங்கையிலும் நிறுவ தேவையான வசதிகளை ஏற்படுத்த இலங்கை  குறித்த நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
  • கல்வித் தரநிலைகள், ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் மற்றும் மாணவர் பரிமாற்றத் திட்டங்களை மேம்படுத்துவதற்கான பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு ஆரம்பங்களை ஊக்குவித்தல்.
  • அரசு சாரா மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விக்காக தற்போதுள்ள அரசாங்க கடன் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொழில்முறை பயிற்சி நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்படும்.
  • தொழில்முறை பயிற்சி பாடத்திட்டங்கள் தற்போதைய சந்தை தேவைகளுக்கு ஏற்ப விரிவாக புதுப்பிக்கப்பட்டு தரப்படுத்தப்படும். இதன் மூலம் பட்டதாரிகள் துறைக்கு ஏற்ற மற்றும் தேவைப்படும் திறன்களைக் கொண்டவர்களாக இருப்பது உறுதி செய்யப்படும்.
  • நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் இளைய சமுதாயம் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய பிரஜைகளாக இருக்க வேண்டும். அவர்களின் உழைப்பு பங்களிப்பை நாட்டின் வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தஇ கல்வி, தொழில் பயிற்சி, தொழில்முனைவு ஆகியவற்றுக்கான நவீன வசதிகளை வழங்குவதன் மூலம், அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய வாய்ப்புகளை அடைந்து கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
Download Education Charter

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்