எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து உரிமைகள் மற்றும் சலுகைகள் விடயத்தில் அனைத்து உரிமைகளையும் வழங்கி, ஆதிவாசிகள் சமூகங்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது ஐக்கிய மக்கள் கூட்டணியின் உறுதியான நம்பிக்கையாகும். காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதாலும் நீர்ப் பற்றாக்குறையாலும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு நடைமுறைக்கேற்ற மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவது எதிர்கால அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும். உள்நாட்டு ஆதிவாசிகள் சமூகம் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினையான நுண்நிதி நெருக்கடிக்கு விரைவான தீர்வு வழங்கப்படும்.
மேலும், ஆதிவாசிகள் சமூகங்களின் மத, கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம்.