மனித இனத்தின் வளமான பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாக இயலாமையை அங்கீகரிக்கும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம். இந்த கருத்தியல் கட்டமைப்பிற்குள், இலங்கையின் வளர்ச்சி மற்றும் சமூக கட்டமைப்பிற்குள் மாற்றுத்திறனாளி குடிமக்களின் தன்னாட்சி, உள்ளடக்கம் மற்றும் பங்களிப்பை நாங்கள் உறுதி செய்வோம்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நன்மைகள் தொடர்ந்து வழங்கப்படும். மேலும்இ 410,000 பயனாளிகளுக்கு நலன்புரி உதவித்தொகை மாதத்துக்கு 10,000 வரை (ரூ. 7,500 இலிருந்து) அதிகரிக்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப உள்நாட்டு சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல்.
- கல்வி, வேலைவாய்ப்புகள், சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு, வீட்டுவசதி, போக்குவரத்து, விளையாட்டுதுறை, நீதித்துறை, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் சமூக, மத, கலாச்சார மற்றும் பிற உரிமைகள் தொடர்பான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் அணுகலை உறுதி செய்வோம்.
- மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை திறமையாகவும் பயனுள்ள வகையிலும் நிர்வகிப்பதற்காக தேசிய தரவுத்தளம் அமைக்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அரச சேவையில் 3% வேலைவாய்ப்புகளை வழங்கும் கொள்கை அமுல்படுத்தப்படும்.
- மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் அனைத்து குடிமக்களின் உரிமைகளுக்கு இணையாக இருப்பதை உறுதி செய்ய கொள்கைகளின் செயலாக்கத்தை கண்காணிக்க மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் ஆணைக்குழுவை அமைப்போம்.
Download Disability and People with Disabilities Charter