காலாவதியான 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறைச் சட்டம் நீக்கப்பட்டு, நவீன தேவைகளுக்கு ஏற்றவாறு ஒரு வருடத்திற்குள் புதிய விளையாட்டுத்துறைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
உள்நாட்டு விளையாட்டு போட்டிகளின் அட்டவணை நிர்ணயிக்கப்பட்டு, உள்நாட்டு விளையாட்டுகளின் தரத்தை உயர்த்த தேவையான உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சியாளர்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சர்வதேசப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தகுதி பெறும் வீரர்களுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் விசேட நிதியமொன்று நிறுவப்படும்.
"இலங்கை கிரிக்கெட் நிறுவனம்" பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு கிரிக்கெட்டில் ஊழலை ஒழிப்பதற்கும் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்கும் தேவையான சட்டச் சூழல் உருவாக்கப்படும்.
இந்த அத்தியாயம் அனைத்து பிரஜைகளையும் வலுப்படுத்தல்
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.