பின் செல்ல
அனைத்து பிரஜைகளையும் வலுப்படுத்தல்

சமூக வலுப்படுத்தல் மற்றும் சுபீட்சத்தைக் கட்டியெழுப்புதல்

சமூக நீதியைப் பாதுகாக்கவும், சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைப் பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளோம். தன்னம்பிக்கை மற்றும் சுய வலிமை கொண்ட, அரசாங்கத்தை சார்ந்திராத ஒரு தேசத்தை உருவாக்குவதே எமது தத்துவமாகும்.

  • சிரேஷ்ட குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு நேரடி நிதி உதவி வழங்கப்படும்.
  • சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள 50,000 நபர்களுக்கான நலன்புரி உதவித்தொகையை மாதத்திற்கு ரூ. 10,000/- வரை (ரூ. 7,500/- இல் இருந்து) அதிகரித்தல்.
  • 820,000 முதியோர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி உதவித்தொகையை மாதத்திற்கு ரூ. 5,000/- வரை (ரூ. 3,000/- இல் இருந்து) அதிகரித்தல்.
  • பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க, வேலையற்றவர்கள் மற்றும் குறைந்த வேலைவாய்ப்பு கொண்டவர்களுக்கு பயிற்சியளித்து, திறன் மேம்படுத்தி வேலைவாய்ப்பு அளிக்கப்படும், அதே நேரத்தில் தொழில்முனைவு வாய்ப்புகளும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், தற்போது வேலையில் உள்ள பட்டதாரிகளுக்கு உயர்ந்த முன்னுரிமை வழங்கப்படும். வேலையற்ற பட்டதாரிகளின் துரித மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் தற்போதைய அறிவு மற்றும் திறன்கள் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட வெற்றிடங்கள் உள்ள அரசு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள்.
  • அரச தலையீட்டில் மேற்கொள்ளப்படுகின்ற வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில்  குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்