சுகாதாரம், போசாக்கு, சுதேச மருத்துவம் மற்றும் சமூக நலன்
தேசிய ஊட்டச்சத்து கொள்கை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வோம்.
கடந்த 25 ஆண்டுகளில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது நமது நாட்டின் வளர்ச்சியை பாதகமாக பாதிக்கிறது. குழந்தைகளின் சிறந்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்க அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க நாங்கள் உறுதியளிப்போம்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு ஒரு கடுமையான சுகாதாரப் பிரச்சினையாக அடையாளம் கண்டு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 'திரிபோச' மற்றும் 'ஊட்டச்சத்து பைகள்' விநியோக திட்டம் மீண்டும் தொடங்கப்படும்.
பாடசாலை மாணவர்களின் கற்றல், வளர்ச்சி மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்த தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துவோம்.
மலிவு விலையில் ஆரோக்கியமான உணவு வழங்குவதை உறுதி செய்ய உணவு உற்பத்தித் துறையுடன் விசேட திட்டத்தை செயல்படுத்துவோம்.
பிரஜைகளிடையே முனைப்புடனான வாழ்க்கை வட்டத்தை ஊக்குவிக்க உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துவோம்.
முதியோர் மற்றும் நாள்பட்ட நோயாளிகளை கவனித்துக் கொள்ளவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பராமரிப்பு வசதிகளை வழங்கும் நிலையங்களை அதிகரிப்பதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்ளுவோம்.
40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 03 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசின் பங்களிப்புடன் முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, ஆரோக்கிமான குடிமக்களை உருவாக்குவதன் மூலம், அரசாங்கத்தின் சிகிச்சை செலவைக் குறைத்தல் இதன் நோக்கமாகும்.
இலங்கையர்களுக்கு மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் 'மூச்சு' திட்டம் எமது அரசாங்கத்தின் முன்னுரிமை பணியாக இருக்கும். உலகளாவிய தர நியமங்களை பூர்த்தி செய்யஇ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது முழு சுகாதார சேவை வலையமைப்பின் முழுமையான கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படும். சமூகத் தேவைகளுக்கு மருத்துவமனைகளை மாற்றியமைக்கவும், மேம்பட்ட சுகாதார அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்தவூம் "மூச்சு" திட்டத்திற்கு தொடர்ந்து நிதியளிக்க நன்கொடையாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
டிஜிட்டல் அடையாள அட்டை மூலமும் அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவைகள் வழங்கப்படும்.
இலவச சுகாதார உரிமை விரிவுபடுத்தப்படுவதுடன் "சுரக்சா சுகாதார காப்புறுதி"யை விரிவுபடுத்தப்படுவதன் மூலம் பிள்ளைகள் எந்த மருத்துவமனையிலிருந்தும் சிகிச்சை பெறுவதற்கான சாத்தியத்தை உருவாக்குவோம்.
சுதேச மருத்துவம் இலங்கையில் தேசிய மரபுரிமையாகக் கருதி நடவடிக்கை எடுப்போம். ஆயூர்வேதம், பாரம்பரிய, சித்த மருத்துவம், யூனானி, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதுடன் மாற்று மருத்துவ மரபுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படும்.
உலகின் சிறந்த ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு, தற்போது மக்களால் பெரிதும் பாராட்டப்படும் 1990 சுவ செரிய ஆம்புலன்ஸ் சேவை, மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். மேலும், இந்த நோக்கத்திற்காக, செயற்கை நுண்ணறிவூ (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.