மின்சாரம் மற்றும் வலுசக்தித் துறைகளில் எமது அணுகுமுறையானது தனிப்பட்ட விருப்பத்தை குறைக்கும் வெளிப்படையான, தானியங்கி அமைப்புகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும், மேலும் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப கையாளுவதற்கான இடைவெளிகளை மூடி, கோரப்படாத முன்மொழிவுகளை (Unsolicited Proposal) நோக்கி செல்வதற்கான "மறைமுக கொடுக்கல் வாங்கல்காரர்கள்" தொடர்பான ஊக்குவிப்புகள் அகற்றப்படும்.
உற்பத்தி மற்றும் விநியோகத்தில் போட்டியை உருவாக்க வேண்டியது அவசியம், ஏகபோக அதிகாரம் மற்றும் திறமையின்மை காரணமாக ஏற்படும் அதிக வலுசக்தி செலவின் சுமையை நுகர்வோர் மற்றும் தொழில்துறை ஏற்கக் கூடாது. செலவை பிரதிபலிக்கும் மின்கட்டண முறைக்கு ஆதரவளிக்கிறோம், ஆனால் இந்த செலவில் மின்சார கொள்வனவு ஒப்பந்தங்களில் ஊழல் மற்றும் திறமையின்மையின் சுமை நீக்கப்பட வேண்டும்.
புதிய மின்சார சட்டத்தால் முன்மொழியப்பட்ட கட்டமைப்பை மறு மதிப்பீடு செய்து, சீர்திருத்த செயல்முறையின் திறன் மற்றும் செலவு பயனுள்ளதாக இருப்பதை உறுதிசெய்ய திருத்தங்களை பரிந்துரைக்கிறோம். எமது முன்னுரிமைகளில் நியாயமான மின்சார சந்தையை நிறுவுதல், நுகர்வோர் நலனைப் பாதுகாத்தல், பொறுப்புக்கூறலை அதிகரித்தல் மற்றும் தொழில்துறையை அரசியல் மயமாக்காமல் இருப்பது ஆகியவை அடங்கும்.
இலங்கையை பிராந்திய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, 2030க்குள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியில் 70% இலக்கை அடைவது மட்டுமல்லாமல், அந்த எல்லையையும் தாண்டிச் செல்வது எமது தொலைநோக்கு பார்வையாகும்.