நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறை எதிர்கொள்ளும் நெருக்கடியான நிலைமையை உணர்ந்த முதல் அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இத்துறையின் தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளோம். மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறையின் பிரதிநிதிகளுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), உலக வங்கி (WB), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற முக்கிய சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டங்களை ஏற்பாடு செய்து, அவர்களுக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தோம்.
ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் இருந்து வந்த அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில்இ நுண்இ சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறைக்கு சில நிவாரணம் அளிக்கும் வகையில் அரசாங்கம் 2024 டிசம்பர் 15 வரை "பராட்டே" சட்டத்தின் அமுலாக்கத்தை இடைநிறுத்தியது. எதிர்கால அரசாங்கத்தின் கீழ் இந்த இடைநிறுத்த காலத்தை கணிசமான காலத்திற்கு நீடிக்க நாங்கள் உறுதியளித்துள்ளோம். இதற்கு மேலதிகமாகஇ அனைத்து அரச மற்றும் வணிக வங்கிகளிலும் பிரத்தியேக நுண், சிறிய மற்றும் நடுத்தர கடன் பிரிவுகளை நிறுவுவதை கட்டாயமாக்குவோம். இந்த பிரிவுகள் ஒவ்வொரு நிலைமையையும் தனித்தனியாக பகுப்பாய்வு செய்யும். மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் கீழ், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பிரிவுக்கு நிலையான ஆதரவு வழங்கப்படுவதை உறுதிப்படுத்தி, உண்மையிலேயே பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு சலுகை வட்டி விகிதங்களுடன் தற்போதுள்ள கடன்களை நீண்ட கால கடன்களாக மாற்றுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.
டுக் டுக்: முச்சக்கர வண்டி சாரதிகளின் தினசரி பெற்றோல் செலவைச் சேமிக்கும் வகையில், முச்சக்கர வண்டிகளின் எரிபொருள் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்றுவதற்கு வட்டிச் சலுகை வசதியை வழங்குவோம். கடன் திட்டம் வங்கி முறைமையின் மூலம் நிர்வகிக்கப்படும்.
சுபீட்சமாக வளரும் துறையை உருவாக்கி, கணிசமான எண்ணிக்கையிலான தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்றி அனைத்து தொடர்புடைய காரணிகளையும் ஒருங்கிணைத்து, அனைத்து தரப்புகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் குறித்த தேசியக் கொள்கையை உருவாக்குவோம்.
இந்த அத்தியாயம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.