பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்கியாக பெரிய மற்றும் சிறிய தனியார் தொழில்முனைவர்களுடன் இணைந்து உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைந்த சமூக சந்தைப் பொருளாதாரமாக இலங்கையை மாற்றுவதற்கு எங்கள் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். இந்த மாற்றத்திற்கு இரண்டு முக்கிய நடவடிக்கைகள் தேவை: வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மூலம் உலகளாவிய பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி மற்றும் தொழிலாளர் சந்தைகள் உள்ளிட்ட உள்நாட்டு சந்தைகளை விடுவித்தல். பயனுள்ள சந்தை சமிக்ஞைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் இது தேசிய வளர்ச்சிக்கான தனியார் துறையின் முழு பங்களிப்பை வலுப்படுத்தும்.
விவசாயத் துறையின் பல்வேறு துறைகளில் எழுந்துள்ள சவால்களுக்கு தீர்வு காண அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். பழைய சட்டங்கள் நவீனமயமாக்கப்பட வேண்டியுள்ளன. கமத்தொழில் சந்தையை இலகுபடுத்துவதற்கு நீர்ப்பாசனம் மற்றும் குளங்களை புனரமைப்பதற்கும் நிதி மற்றும் காப்புறுதி வசதிகளையும் வழங்க வேண்டியுள்ளது.
தனிப்பட்டவாறு ஒவ்வொரு விவசாயிகளையும் பொறுத்தவரையில், எது உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வளவு மற்றும் எப்போது என்பது பற்றிய தகவல்களைப் பெறுவது முதல் நிதி உள்ளீடுகள் மற்றும் பயிர் சுழற்சி முகாமைத்துவம் வரையிலான முழு மதிப்புச் சங்கிலியும் மேம்படுத்தப்பட வேண்டும். பின்னர் சேமிப்பு, விநியோக சேவை தொடக்கம் விற்பனை வரை மேற்கொள்ளப்படுகின்ற அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவத்துக்குரிய பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
கிராமப்புற வறுமையைக் குறைத்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் கிராமியத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக விரைவான, ஸ்மார்ட் தொழில்நுட்பம் சார்ந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம். இதில் - நெல், காய்கறிகள் மற்றும் தோட்டப் பயிர்கள் - பயிரிடுவது முதல் விற்பனை செய்வது வரை, பாதுகாப்பான விவசாயம்இ நீர் உயர்த்தி நீர்ப்பாசனப் பணிகள் (lift irrigation) சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் சில நேரங்களில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ஹைட்ரோபோனிக் விவசாயம் போன்ற தலையீடுகள் அடங்கும். டிஜிட்டல் பொதுக் உட்கட்டமைப்பை (DPI) அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த முயற்சியை செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வர முடியும்.
அரிசி விலையைக் குறைத்து குறைந்த விலையிலேயே வைத்திருக்க 'சக்தி' அரிசி ஆலை உரிமையாளர்களின் தேசிய கூட்டுறவு திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவோம். 40% அறுவடைக்குப் பின் இழப்பைக் குறைக்க காலநிலை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விவசாய உற்பத்தி களஞ்சிய வலையமைப்பான 'பிரபாஸ்வர' நிகழ்ச்சித்திட்டம் உடனடியாக நாடு முழுவதும் நிறுவப்படும். இதுவும் உணவு விலையைக் குறைக்க உதவும்.
இதுவரை பயன்படுத்தப்படாத பயிற்சிகளை வழங்கக்கூடிய பணியாளர்கள் மற்றும் எமது மூலோபாய அமைவிடத்தைப் பயன்படுத்தி, பகுதி உற்பத்தியில் தொடங்கி உலகளாவிய உற்பத்தி மதிப்புச் சங்கிலியுடன் (Global Manufacturing Value Chains) இலங்கை இணைக்கப்படும். இதில், கிராபைட் (Graphite) உள்ளிட்ட முக்கியமான பொருட்களின் மாற்றங்களைப் பயன்படுத்தி உலகளாவிய இலத்திரனியல் மற்றும் மின்சாதன உற்பத்தி மற்றும் மின் வாகன பாகங்களுடன் ஒருங்கிணைக்க திட்டமிடுகிறோம். கைத்தொழில் துறையின் வெற்றியை மேலும் முன்னெடுக்கவும் எமது அரசாங்கம் உறுதிபூணும்.
சேவைத் துறை வளர்ச்சித் திட்டத்தின் முக்கிய கூறாகும். இலத்திரனியல் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் இலங்கையை வழங்கல் சேவை மையமாக மாற்றுவதில் எமது கவனம் இருக்கும்.
நுண், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப வணிக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பெரிய நிறுவனங்களைப் போலவே மொத்த மதிப்பு சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக தொற்றுநோய், அதைத் தொடர்ந்த பொருளாதார வீழ்ச்சி காரணமாக தற்போது நெருக்கடியில் உள்ளன. இலங்கையின் எதிர்பார்க்கப்படும் உயர் வளர்ச்சிப் பாதைக்கு முக்கிய பங்களிப்பாளராக மாற்றுவதற்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை மீட்டெடுத்தல் மற்றும் டிஜிட்டல்மயப்படுத்தல் அத்துடன் மூலதன அனுகல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களும் வழங்கப்படும்.
உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் நெனோ தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளுக்கான ஆசியாவின் பிராந்திய மையமாக துறைமுக நகரத்தை மாற்றுவதற்கான சட்டத் திருத்தங்களை கொண்டு வருவோம்.