காணி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம்

பின் செல்ல
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

காணி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம்

  • காணிப் பயன்பாட்டை உகந்ததாக்கி, சந்தை செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த அரசாங்கம் விரிவான தேசிய காணி வங்கியை நிறுவும். காணி என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் சந்தை இயக்கவியலின் முக்கிய காரணி என்பதை அங்கீகரித்து, இந்த முயற்சி காணித் தகவலை மையப்படுத்தி, திறமையான காணி ஒதுக்கீட்டிற்கு வசதி செய்து, நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளித்தல்.
  • அரச காணிகளில் வசிக்கும் காணி அனுமதி பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள்  உறுதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நீர் மூலாதாரங்கள் மற்றும் நீரேந்து பகுதிகளை பாதுகாக்க சட்டம் வலுப்படுத்தப்படும்.
  • நாட்டின் உள்ளகப் பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகபட்ச அளவில் பராமரிக்க தேவையான முதலீடுகளை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என்பதுடன் தேவையான நீர் தேவைப்பாட்டை அடைய அனைத்து சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களும் புனரமைக்கப்பட்டு  பராமரிப்பு செய்யப்படுவதும் உறுதி செய்யப்படும்.
இந்த அத்தியாயம்
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்