மில்லேவ, மில்லெனிய மற்றும் பிங்கிரிய ஏற்றுமதி வலயங்களில் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 25 புதிய தொழில்துறை வலயங்களை முன்முயற்சியுடன் நிறுவுதல். சமநிலையான பிரதேச அபிவிருத்தியை உறுதிசெய்து, நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் இதன் நோக்கமாகும். இந்த வலயங்களில் ஒவ்வொரு வலயத்திலும் ஒரு உற்பத்தி தொழிற்சாலையை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலம் செயல்படுத்தப்படும். தொழிற்சாலைகளின் எண்ணிக்கை படிப்படியாக 341 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இலங்கையின் இயற்கை வளங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, நிலைத்தொழில்நுட்பத்தில் முன்னணி நிலையை அடைவதற்காக, நாடெங்கும் 'பசுமை தொழில்நுட்ப புத்தாக்க நிலையங்கள் (Green Tech Innovation Hub)' என்ற ஒரு வலைப்பின்னலை உருவாக்கி. இந்த முன்னெடுப்பின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துஇ உயர் திறன் வாய்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கிஇ சர்வதேச சந்தையில் சுற்றுச்சூழல் நட்பை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளில் முன்னோடியான இடத்தை இலங்கை அடைந்து கொள்வதற்கு வழிவகுக்கப்படும்.
"ஒரு மில்லியன் தொழில்முயற்சிகள்" தொடக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக '18+ புதிய தொழில்முயற்சிகள் கருத்திட்டம்' நடைமுறைப்படுத்தப்படும். இந்தக் கருத்திட்டத்தில் இளைஞர் தொழில்முயற்சியாளர்கள் மட்டுமன்றி குறிப்பாக புதிய பட்டதாரிகளும் உள்ளடக்கப்படுவதுடன் அவர்களுக்கு தொழில்முயற்சிக்கான ஆரம்பக் கடன், ஆலோசனைகள் மற்றும் அத்தியாவசிய வழிகாட்டலுடன் அவர்கள் வலுப்படுத்தப்படுவர்.
புதிய கைத்தொழில்களைப் பதிவு செய்வதற்கான இலகுபடுத்தப்பட்ட 'பன்முக சேவை நிலையங்களை' (One-Stop Shop) நிறுவுதல் மற்றும் அதன் மூலம் தொழில் முனைவோருக்குத் தேவையான அனைத்து அரச அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெற்று, வினைத்திறனுடன் தங்கள் வணிகங்களைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்படும். இந்த முன்னெடுப்பு மூலம் நிர்வாகத் தடைகளை கணிசமாகக் குறைத்து சட்ட, ஒழுங்குவிதிகளைத் தளர்த்தி இலங்கையில் புதிய தொழில்முயற்சிகளைத் ஆரம்பிப்பதற்கான நடைமுறை துரிதப்படுத்தப்படும்.
பாரம்பரிய உற்பத்தி அறிவை தங்கள் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக பாதுகாக்கும் இலங்கையின் கிராம, குடிசை மற்றும் பாரம்பரிய கைவினைத் தொழில்கள் தனித்துவமான துறையாக அங்கீகரிக்கப்படுகிறது. இந்தத் தொழில்கள் விடுதி சந்தையில் விரித்தியடைய அனுமதிக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட வசதிகள், சந்தை நிலைப்படுத்தல் நிபுணத்துவம், செலவு குறைந்த உற்பத்தி உத்திகள், பொதியிடல் மேம்பாடுகள் மற்றும் மூலதனம் பெறுவதற்கான நிதி உதவி ஆகியவற்றின் மூலம் இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை வழங்குவோம்.
கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக அரசியல் நீக்கம் செய்யப்படும், மேலும் சட்ட சீர்திருத்தங்கள் மூலம் கூட்டுறவு வங்கிகள் வலுப்படுத்தப்பட்டு சேமிப்புகள் பாதுகாக்கப்படும். இந்த சீர்திருத்தங்கள் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் மூலம் இலங்கையின் கூட்டுறவுத் துறையை புத்துயிர் பெறச் செய்வோம். இந்த நடவடிக்கைகள் அடிமட்ட நிலையான பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதன் மூலம் செயற்பாட்டு திறனை மேம்படுத்தி, வணிக மாதிரிகளை பன்முகப்படுத்தி, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றின் சமூகங்களுக்கு பரஸ்பர நன்மைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும்.
பொருளாதாரம் முழுவதும் புத்தாக்கம், வர்த்தக முத்திரைகள், புலமைச் சொத்துரிமைகள் மற்றும் செயற்பாட்டு திறனை சிறப்பாக பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பரந்த நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சட்டங்களை புதுப்பித்தல்.
நமது பொருளாதாரத்திற்கு ஆடைத் துறையினால் கிடைக்கப் பெற்றுள்ள மதிப்புமிக்க பங்களிப்பை நாம் பாராட்டுகிறோம். அதன்படி, ஊழியர்கள் மற்றும் கைத்தொழில்துறை ஆகிய இரண்டின் நல் இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒரு விசேட சாசனத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவோம். இந்த சாசனம், உலகளாவிய உற்பத்தி மதிப்புச் சங்கிலியின் இயக்க சக்தியாக திறன்மிக்க உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும். இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் ஆடைத் துறை ஊழியர்களுக்கு காப்புறுதி மற்றும் சிறுவர் பராமரிப்பு வசதிகளை வழங்குவதற்கும் தலையிடுவோம்.
இந்த அத்தியாயம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.