ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்த “இலங்கைக்கான சுற்றுலாத்துறைக் கொள்கை” நிலையான மற்றும் அனைத்து வளர்ச்சி உள்ளடக்கத் திட்டம்" (Tourism Policy for Sri Lanka: A Blueprint for Sustainable and Inclusive Growth) கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இலங்கையின் சுற்றுலாத் துறையை சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்து அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ளுவதற்கான நடவடிக்கையை எடுத்தல் அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
தற்போதைய அரசாங்கத்தால் கையொப்பமிடப்பட்ட ஊழல் நிறைந்த “VFS விசா ஒப்பந்தத்தை” இரத்து செய்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறைந்த விலையில் விசாக்களை எளிதாகப் பெறுவதற்கான நவீன முறைமை உருவாக்கப்படும். அத்துடன், இலங்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய ஊழலான இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
100 நாடுகளின் குடிமக்கள் முன்கூட்டியே விசா பெற வேண்டிய தேவையின்றி ஒரு மாத காலத்திற்கு இலங்கைக்கு வர அனுமதிக்கும் விசா இல்லாத நுழைவுத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு நாட்டிற்குள் எளிதாக வருவதற்கான வசதி செய்வதற்காக வெளிநாடு வாழ் இலங்கைப் பிரஜைகள் திட்டத்தை (Overseas Citizens of Sri Lanka Programme) செயல்படுத்துவதை துரிதப்படுத்தி அவர்களுக்கு இலங்கையின் வதிவிடக்காரர்களாக செயற்படுவதற்கு வசதிகளைச் செய்வோம்.
கொழும்பு நகரத்தை தெற்காசியாவின் மிகவும் அழகான மற்றும் முதலீட்டாளர் நட்பு நகரமாக மாற்றுவோம். இந்த நகர்ப்புற மறுமலர்ச்சி மற்றும் சுற்றுலா சந்தை பன்முகப்படுத்தலுடன்இ கொழும்பு நகரம் பிராந்திய வணிக மற்றும் பொழுதுபோக்கு மையமாக நிலைநிறுத்தப்படும், இது அனைத்து பருவங்களிலும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
சுற்றாடல் நட்பு எண்ணக்கருத்துகளுக்கு முன்னுரிமை அளித்து, உள்ளுர் சுற்றுலாத் தொழிலை மீண்டும் வலுப்படுத்தும் அதே வேளையில், இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாக்கும் நிலையான நடைமுறைகளை உறுதி செய்து, சிறுத்தை பார்வையிடல் சிறப்பம்சமாக கொண்ட முன்னணி வனவிலங்கு இலக்காக இலங்கையின் சுற்றுலாத் துறை மேம்படுத்தப்படும்.
மொழித் திறன் மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி, அரசு-தனியார் கூட்டாண்மை மூலம் முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஆகிய இரு துறைகளிலும் சுற்றுலாத் துறைக்கான விரிவான பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துதல்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.