நிர்மாணத்துறை

பின் செல்ல
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

நிர்மாணத்துறை

  • நியாயமான மற்றும் புத்தாக்க கட்டுமானத் தொழிலை உருவாக்க 'Build Sri Lanka Fair' நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த விரிவான கொள்கை சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில்முயற்சிகளுக்கு இடையே நியாயமான போட்டியை உறுதி செய்வதன் மூலம் ஒப்பந்ததாரர் தர குழுமங்களை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். கட்டிட தகவல் மாதிரியாக்கம் (Building Information Modeling) போன்ற முன்னேற்றமடைந்த தொழில்நுட்பங்களின் பயன்பாட்டில் முன்னணி வகிப்பதற்காக ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவையும் இது நிறுவும். இந்த முன்முயற்சி துறையை நவீனமயமாக்கி, உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து, வலுவான, திறமையான மற்றும் வெளிப்படையான கட்டுமான சூழலமைப்பு உருவாக்கப்படும்.
  • பிரச்சினைகளைத் தீர்ப்பதை ஒழுங்குபடுத்துவதற்கும், நிர்மாணத் துறையில் ஒழுங்குபடுத்தல் இணக்கத்தை மேம்படுத்துவதற்கும்'Swift Build' Smart Resolve திட்டம் அமுல்படுத்தப்படும். இந்தத் திட்டம் பிரச்சினைகளை திறமையாகத் தீர்ப்பதற்காக கட்டுமானத் திட்டங்களுக்கான நிலையான ஆலோசனைக் குழு (SA+CCP) மற்றும் உயர் மதிப்புள்ள திட்டங்களை கண்காணிப்பதற்காக கட்டுமானத் திட்டங்களுக்கான தேசிய செயல்பாட்டுக் குழு (NCCP) ஆகியவற்றை அறிமுகப்படுத்துதல். நிலையான ஏல ஆவணங்களுக்கு இணங்குவதை கட்டாயப்படுத்துவதற்கும், ஒத்திசைவை உறுதி செய்வதற்கும், மோதல்களைக் குறைப்பதற்கும் கட்டுமானத் தொழில் மேம்பாட்டு ஆணைக்குழுவிற்கு (CIDA+) அதிகாரம் அளிக்கப்படும்.
  • நிறுத்தப்பட்ட கருத்திட்டங்களை மூலோபாய மதிப்பாய்வுடன் மீண்டும் தொடங்குதல் செலவு குறைந்த தீர்வுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்து, ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசாங்கத்தின் மீது மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்தாமல், அத்தியாவசியமற்ற கருத்திட்டங்களை இரத்து செய்வதன் மூலமோ அல்லது மறுசீரமைப்பு செய்வதன் மூலமோஇ இந்த அத்தியாவசிய கருத்திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு எதிர்கால அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும்.
  • கட்டுமான சேவைகள் மற்றும் தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவித்தல் அரசாங்கம் ஏற்றுமதித் தொழிலாக கட்டுமானத் துறையை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எல்லைகளுக்கு இடையிலான சான்றளிப்புக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல், இராஜதந்திர ஆதரவு வழங்குதல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பை தொடங்குதல் ஆகியவற்றின் மூலம் இதை செயல்படுத்த முடியூம்.
  • விநியோக சங்கிலியை நவீனமயமாக்கி நிர்மாணிப்பு உள்ளீடு உற்பத்தியை உள்நாட்டில் மேற்கொள்ளுதல்.
  • சம தளத்தில் செயல்படுவதற்கான வாய்ப்பை உறுதி செய்து, நியாயமான போட்டி மற்றும் ஒழுங்குமுறை அமுலாக்கத்திற்கான இடத்தை திறத்தல்.
  • பிடித்து வைக்கும் நிதியங்களுக்கு பதிலாக உத்தரவாதங்கள் அல்லது பிணைமுறிகளை வைப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட வேலைகள் 60% முடிந்த பிறகு பிடித்து வைத்த நிதியை கட்டாயம் சேவை வழங்குநர் விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தும்.
இந்த அத்தியாயம்
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்