சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் வருவாய் அதிகரிப்பில் கவனம் செலுத்தினாலும், அது அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. எனவே, வீணான அரச செலவுகளையும் ஊழலையும் கட்டுப்படுத்துவதே எங்கள் பொருளாதார பார்வையின் நோக்கமாகும். அரச நிறுவனங்களை சீர்திருத்துவதும் இதில் அடங்கும். இவ்வாறு சேமிக்கப்படும் நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூக பாதுகாப்பு வலையமைப்பை செயல்படுத்துவதற்கும், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்தவும்இ பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும்இ அரசாங்க செலவினங்களை நிர்வகித்து, அரசாங்கச் செலவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த தரவு அடிப்படையிலான திட்டமிடலைப் பயன்படுத்துவோம்.