மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள்

பின் செல்ல
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள்

நீல பொருளாதார (Blue Economy) கோட்பாடுகளின் அடிப்படையில், இலங்கையின் கடல் எல்லைக்குள் நீர்வாழ் வளங்களை உச்சபட்சமாகப் பயன்படுத்தி, அரசு-தனியார் துறை கூட்டாண்மைகள் (PPP) மூலம் நிலையான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்போம்.

  • மீனவ சமூகத்தின் பொருளாதார பலத்தை அதிகரிக்க, அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் தொழில்முனைவோருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கி அவர்களின் தொழில்முயற்சித் திறன்களை மேம்படுத்த விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
  • செயற்கை நுண்ணறிவூ (AI) மற்றும் Internet of Things (IoT) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆழ்கடல் மீன்பிடித்தல் முன்கணிப்புத் திட்டத்தை உருவாக்குதல் மற்றும் அந்தத் தகவலை மீனவ சமூகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க தேவையான எளிய முறைகளை அமைத்தல்.
  • மீன்பிடி சுற்றுலாத் தொழிலை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் அதன் மூலம் மீனவ சமூகத்தின் பொருளாதார பலத்தை மேம்படுத்த மாற்று வருமான ஆதாரங்களை உருவாக்குதல். மீனவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாற்றுத் தொழில்முனைவுக்கான பயிற்சியும் ஊக்கப்படுத்தலும்.
  • நாடு முழுவதும் மீன் வளங்களின் விநியோகத்தை முறைப்படுத்துவதன் மூலம், நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மக்கள் புதிய மீன்களைப் பெறுவதை சாத்தியமாக்குதல்.
  • நாட்டின் உள்நாட்டு நீர்வழிகளின் பயன்படுத்தப்படாத திறனை உணர்ந்து, தேசிய மீன்வளத் துறையின் முக்கிய கூறாக நன்னீர் மீன்வளர்ப்பு துறையை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிடும்.
  • எளிதான சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் இலக்கு சந்தைப்படுத்தல் உத்திகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட ஆதரவு நடவடிக்கைகள் மூலம் அலங்கார மீன் தொழிலுக்கும் அதன் ஏற்றுமதிக்கும் வசதி செய்யப்படும்.
  • வெளிநாட்டு சட்டவிரோத மீன்பிடி கப்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியாக தீர்க்க மற்றும் கண்காணிக்க தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல்.
  • மீன்பிடி துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் இடங்களை மேம்படுத்த தேவையான முதலீட்டுக்கு முன்னுரிமை வழங்குதல்.
இந்த அத்தியாயம்
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்