சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பொது நிதி ஒழுக்கத்தை வலுப்படுத்தி, வருமானம், ஆரம்பக் கணக்கு மீதி மற்றும் கடன் தொடர்பான இலக்குகளை அடைவது கடினமாகும். ஆனால் அவசியமான சீர்திருத்தங்களை தொடர்ந்தும் செய்வோம். எவ்வாறாயினும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதை உறுதிப்படுத்தும் தற்போதைய திட்டத்திற்கு திருத்தங்களை முன்வைத்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம்.
எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட அதிக பலனைப் பெற வெளிநாட்டு கடன் வழங்குநர்களுக்கு மீண்டும் தங்கள் பக்கம் சாதகமான திருப்பங்களை செய்யும் உட்பிரிவுகளுக்கு இடமளிக்கும் தீர்வுக்கு ஒப்புக்கொள்ளும்போது, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் சுமையை தாங்கிய ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 'சம வாய்ப்பு' வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.