அகழ்வு அனுமதிகளை எளிதாக்க வினைத்திறன் வாய்ந்த, வேகமான மற்றும் வெளிப்படையான முறைமையை நிறுவூதல்.
நவீன அகழ்வு தொழில்நுட்பங்களை பெறுவதற்கு சிறிய அளவிலான சுரங்க தொழிலாளர்களுக்கு நிதி வசதிகளை வழங்குதல்.
நியாயமான மற்றும் சமத்துவமான முறையில் அகழ்வுக்கு அதிக நிலப்பரப்பை திறத்தல்.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தலையீடும் இல்லாமல் எளிதான ஏற்றுமதி செயற்பாடுகள் உறுதி செய்யப்படும் பொருட்டு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை மறுசீரமைக்கப்படும். அனைத்து ஏற்றுமதியாளர்களும் தங்கள் சுங்க அறிக்கைகளை சமர்ப்பிக்க மற்றும் தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் போன்று சமமாக தங்கள் அலுவலகங்களிலிருந்து நேரடியாக பொருட்களை ஏற்றுமதி செய்ய சுங்க இணையத் தளத்திற்கு நேரடி பிரவேசம் கிடைக்கும்.
அனைத்து இலங்கையர்களும் முற்றிலும் இணையவழி முறைகள் மூலம் குரியர் மற்றும் அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தி திறமையான மற்றும் ஏற்றுமதி வழிமுறைகள் மூலம் உலகின் பிற நாடுகளுடன் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களை வர்த்தகம் செய்ய முடியும்.
தொழில்துறையின் வருமான வரி மதிப்பீட்டுப் புரள்வு அடிப்படையில் மேற்கொள்ளல் வேண்டும் - தற்போதைய நிகர இலாபத்தின் அடிப்படையிலான 30% வரி விகிதம் திருத்தம் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும்.
பெறுமதி சேர் மற்றும் மறு ஏற்றுமதிக்காக இலங்கைக்கு அதிக இரத்தினக்கற்கள் வருவதை ஊக்குவிக்க, இரத்தினக்கற்கள் இறக்குமதி மீதான பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு வரியை நீக்குதல் கவனத்தில் கொள்ளப்படும். தன்னுடன் கொண்டு வரப்படும் இரத்தினக்கல் பொதிகளின் இறக்குமதிக்கு பொதியொன்றுக்கு 200 அமெரிக்க டாலர் என்ற கட்டண முறையை மீண்டும் அறிமுகப்படுத்துதல் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும்.
அந்நிய செலாவணிக்கான அனைத்து இரத்தினக்கல் மற்றும் ஆபரண விற்பனைகளும் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
சட்டப்பூர்வ ஆபரண உற்பத்தியாளர்களுக்கு, அவர்களின் தங்க இறக்குமதிக்கான கொடுப்பனவு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்றுமதி செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஈட்டப்பட்ட அந்நிய செலாவணி மூலம் செலுத்தப்படும்போது, தீர்வை வரியை நீக்க பரிந்துரைக்கப்படுகிறது.
முடிக்கப்பட்ட இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களுக்கான பெறுமதி சேர் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க இந்த பொருட்களின் மீதான தீர்வை வரி நீக்கப்படும்.
இது முக்கிய வர்த்தக மையங்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்து துறையின் திறன் அபிவிருத்தியை உறுதி செய்யூம் பொருட்டு இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முழுமையாக மறுசீரமைக்கப்படும்.
இந்த அத்தியாயம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.