மின்சக்தி மற்றும் வலுசக்தி

பின் செல்ல
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

மின்சக்தி மற்றும் வலுசக்தி

  • நுகர்வோருக்கு நியாயமான மற்றும் போட்டி விலைகளில் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய மின்சாரத் துறையில் ஊழல் மற்றும் திறமையின்மையை அகற்றத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
  • மின்சாரம், பெற்றோலியம் மற்றும் எரிவாயு துறைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்இ மேலும் முற்றிலும் ஊழலற்ற மற்றும் திறமையான மின்சார கொள்முதலுக்கான உலகத் தரத்திற்கு ஏற்ற நடைமுறைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • ஏற்கனவே தேசிய மின்சார முறைமைக்கு 1,300 மெகாவாட்டைச் சேர்த்துள்ள "சூரிய சக்தி போர்" (Battle for Solar Energy) திட்டம் மேலும் ஊக்குவிக்கப்படும். சலுகை வட்டி விகிதத்தில் "சூரிய மின் நிலையங்களை" அமைக்க வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். 5 ஆண்டுகளில் ஒரு மில்லியன் வீடுகளை சூரிய சக்தியால் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • 1,200 மெகாவாட் கடலோர காற்றாலை மின் திட்டத்திற்கு (Off-shore) முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் நாட்டில் கரையோர காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரத்தை மேம்படுத்த வெளிப்படையான போட்டி முறைகள் அறிமுகப்படுத்தப்படும். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இலங்கையின் மின்சார முறைமை  05 வருடங்களுக்குள் Smart Grid ஆக மாற்றப்படும்.
  • தற்போதுள்ள அனல் மின் நிலையங்கள் 02 ஆண்டுகளுக்குள் எல்என்ஜியில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்படும் மற்றும் உள்நாட்டு வலுசக்தித் தேவைகளுக்கு என்ஜிஇ எல்என்ஜி மற்றும் சிஎன்ஜியைப் பயன்படுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அரச மற்றும் தனியார் தலையீடு மூலம் வழங்கப்படும்.
  • காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரத்துறை உட்பட புத்துயிர்ப்பு வலுசக்திக்குத் தேவையான இயந்திர பொறிமுறைகளை உற்பத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான வசதிகளை நாட்டில் உருவாக்க தேவையான நடவடிக்கைகள்  அரச மற்றும் தனியார் துறைகளின் தலையீட்டின் மூலம்  மேற்கொள்ளப்படும்.
  • 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மின்சார ஊழியர்களின் உரிமைகளுக்கு எதிரான  மற்றும்  நுகர்வோர் உரிமைகளுக்கு எதிரான விதிகளை நீக்கி வினைத்திறன் வாய்ந்த ஸ்மார்ட் மின்சார அமைப்பை நாட்டில் கட்டியெழுப்ப முன்னுரிமை அளிக்கப்படும்.
  • இலங்கையின் நிலையான வலுசக்தி திறனைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு தேவைகளை தாண்டி ஏற்றுமதி செய்வதற்கான சாதகமான வாய்ப்பு உள்ளது. பசுமை ஐதரசன் உற்பத்தியில் ஈடுபட்டு அதற்கான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறௌம்.
  • பிராந்திய வலுசக்தி இணைப்பு திட்டங்களைப் பின்பற்றுவோம்.
இந்த அத்தியாயம்
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்