சுற்றாடலுக்கு உகந்த, நவீன பேருந்துகள், புகையிரதங்கள் இலத்திரனியல் மயமாக்கல், இலகு புகையிரத முறைமை மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தால் இயங்கும் Intelligent Transport Systems (ITS) பல்வகை பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குதல்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும். கஹதுடுவ தொடக்கம் பெல்மதுல்ல வரையான ருவன்புர அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் எமது பிரதான போக்குவரத்து வலையமைப்பின் அடிப்படைப் பகுதியாகக் கருதப்படுவதால், அதன் நிர்மாணப் பணிகள் கட்டம் கட்டமாக முடிக்கப்படும். கிராமியப் பாதைகளை மறுசீரமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தற்போதைய அரசாங்கத்தால் நிறுத்தப்பட்ட களனிவேலி புகையிரத பாதை உள்ளிட்ட புகையிரதத் துறை நவீனமயமாக்கல் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும்.
Multi-Lane Free Flow - MLFF அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிவேக நெடுஞ்சாலைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்.
வினைத்திறனை மேம்படுத்தல் மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவிக்க, இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) ஒரு இலக்கு நோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் தனியார் துறை போக்குவரத்து சேவைகளுடன் போட்டியிட்டு சேவை வழங்கும் திறனை அடைய முடியும்.
சுற்றுலாத் துறைக்கு பெரும் உதவியாக இருக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை விரைவாக முடிப்பதற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நாட்டில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களை சிவில் விமான நிலையங்களாக மாற்றுதல்.
இலங்கையின் தனித்துவமான மூலோபாய அமைவிடத்தைக் கருத்தில் கொண்டு, துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தனியார் துறையினருக்கு அழைப்பு விடுப்போம்.
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.