தற்போதுள்ள விவசாயக் கடன்களை இரத்து செய்வதன் மூலம் விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மேலதிகமாக விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு உதவதற்காக அத்தியாவசிய கடன் வசதிகளை அணுக முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
நாங்கள் 50 கிலோகிராம் உர மூட்டையை 5,000 ரூபாய்க்கு வழங்குவோம். இது எங்கள் விவசாயிகளுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்பதை உறுதி செய்வோம்.
விவசாயிகளை சுரண்டலில் இருந்து பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக நெல் உற்பத்திக்கு மிக உயர்ந்த உத்தரவாத விலை கிடைக்கும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
விவசாய பயிர்ச் செய்கைகளுக்குத் தேவையான அதிக அறுவடை தரும் விதைகள், நாற்றுகள், பூச்சிக்கொல்லிகள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் நியாயமான விலையில் தொடர்ந்து வழங்குவதை நாங்கள் உறுதி செய்கிறோம். விதை பாதுகாப்பும் அதன் முக்கிய பகுதியாக இருக்கும்.
"கமநல சேவை" விவசாய தகவல் சந்தை ஏற்படுத்தப்பட்டு, விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க கமக்காரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். உள்ளுர் மற்றும் வெளிநாட்டு கொள்வனவுகாரர்களுடன் தொடர்பு கொண்டு இந்த சந்தையின் மூலம் விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கும் அவர்களுடன் (Forward Sales Contract) முன்னோக்கிய விற்பனை ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்குமான சாத்தியத்தை ஏற்படுத்துதல்.
விவசாயப் பகுதிகளில் நடமாடும் மற்றும் இணைய வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் தளத்தைப் (Digital Platform) பயன்படுத்தி விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் விவசாய பொருட்களை கொள்வனவுசெய்பவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துதல்.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய விவசாய நிறுவனங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு நவீனமயமாக்கப்படும்.
பெறுமதியைக் கூட்டுதல், பயிர் பன்முகப்படுத்துதல், நவீன விவசாய உள்ளீடுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் சந்தையை விரிவுபடுத்துதல் மூலம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மேம்படுத்தப்படும். விவசாய ஏற்றுமதிக்கு வரி ஊக்குவிப்புகளும் வழங்கப்படும்.
விவசாய மற்றும் வணிகப் பயிர்களை விரிவுபடுத்துவதற்கு தேவையான " நிலப் பயன்பாட்டுத் திட்டங்களை" தயாரித்தல்.
விவசாய காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் வகையில், நிலப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் காலாவதியான சட்டங்களை திருத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பயிரிடப்படாமல் கைவிடப்பட்டுள்ள பாரம்பரிய காணிகள் மற்றும் வயல்களை மீண்டும் பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
வனவிலங்குகளால் சேதமடையூம் பயிர்கள் மற்றும் விளைபொருட்கள் உற்பத்தியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நாங்கள் ஒரு காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.
விவசாயிகளுக்கு நிலையான விலையை வழங்குவதற்காக அவர்களின் உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவதற்காக ஈரப்பதம் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டு வசதிகளுடன் "பிரபாஸ்வர" குளிர்சாதனக்கூடம் மற்றும் இதர வசதிகளை நாடு பூராவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நிறுவுதல்.
பால், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் விலைக் கட்டுப்பாட்டிற்கும் நவீன தொழில்நுட்பத்தின்படி பண்ணைகளை மேம்படுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்குதல் அத்துடன் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகத்தை உறுதி செய்தல். உத்தரவாத விலை மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
சொட்டு நீர் வழங்கல், பாதுகாப்பாக உட்புற செய்கை, பசுமை இல்லங்கள்இ ட்ரோன் தொழில்நுட்பம், AI தொழில்நுட்பம் போன்ற நவீன முறைகளை விவசாயத்தில் அறிமுகப்படுத்துவதற்கான உதவி மற்றும் ஒத்துழைப்பை வழங்குதல்.
தாங்கிக் கொள்ளக் கூடிய கடன் வசதிகள் நுழைவுகளுடனான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாய தொழில்முனைவோரை ஊக்குவிக்க நடைமுறையொன்றை உருவாக்குதல்.
தேயிலை, இறப்பர், தென்னை, கரும்பு, கறுவா மற்றும் பிற ஏற்றுமதி பயிர்களை ஊக்குவிக்க தேவையான அரசாங்க ஆதரவை தொடர்ந்து வழங்குதல்.
நெல் விவசாயியை சுரண்டி நுகர்வோருக்கு அரிசியை அதிக விலைக்கு விற்கும் பெரிய அளவிலான அரிசி ஆலை மாபியாவைக் கட்டுப்படுத்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுடன் "சக்தி சஹல்" திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
இலங்கையின் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அவர்களின் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், அவர்களின் நீண்டகால சுபீட்சத்தை உறுதிப்படுத்துவதற்கும் இலக்கு நோக்கிய கொள்கைகளை செயற்படுத்த நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
கறுவா மற்றும் மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருட்களுக்கான சர்வதேச ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெறுமதி சேர் உற்பத்திகளை அறிமுகப்படுத்தி, உற்பத்திகளின் தரம் மற்றும் தரத்தை உறுதிப்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிர்களை விரிவுபடுத்தி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்தவத்துக்கு நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த அத்தியாயம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.