சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவைகளை திறமையாகவும், நியாயமாகவும் பொதுவாக வகுக்கப்படுதல் பொருளாதார வளர்ச்சி மற்றும் சிவில் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த சேவைகளை வழங்கும் பொறுப்பு அரச துறையிடம் உள்ளது. ஆனால் அது பல்வேறு சமாந்தர சேவைகளுக்கிடையே காணப்படுகின்ற பிரச்சினைகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாத மனித வளங்கள் மற்றும் குறைந்த ஊதியம் காரணமாக அழுத்தத்தில் இத்துறை காணப்படுகின்றது. அரச கொள்வனவு முதல் சேவை வழங்கல் வரை அனைத்து துறைகளிலும் செயல்பாட்டு ஊழல் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை தீர்க்க பல தசாப்தங்களாக சீர்திருத்தங்கள் தோல்வியடைந்துள்ளன. உற்பத்தித்திறனை மேம்படுத்த முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் டிஜிட்டல்மயமாக்கலின் மூலமும் அரச சேவையை சீர்திருத்த திட்டமிடுகிறோம். இது ஊழலைக் குறைக்கும் அதே வேளையில் முகாமைத்துவ, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.
அரச தொழில்முயற்சிகளுக்கான பிரதான கம்பனியை நிறுவுவது அரச தொழில்முயற்சிகளில் சீர்திருத்தத்தின் முக்கிய பகுதியாகும். இந்த அரச நிறுவனங்களுக்கான பிரதான நிறுவனம் சிங்கப்பூரின் 'தமசெக் மாதிரி'க்கு ஒத்த கட்டமைப்பின் கீழ் அரச நிறுவனங்களின் உரிமையாளர்களை நிர்வகிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட மற்றும் மூலோபாய கட்டமைப்பை வழங்கும். தேசிய பாதுகாப்பு நோக்கங்கள், சர்வதேச போட்டித்தன்மை மற்றும் செயல்திறனுடன் சமநிலைப்படுத்தப்பட்டு, பல்வேறு தரப்பினரின் பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் அரசாங்கம் வைத்திருக்கும் பங்குரிமை சதவீதமானது தீர்மானிக்கப்படும்
மருந்து கொள்வனவு முதல் அனைத்து சுகாதார சேவைகள் வரை உயர் தொழில்நுட்ப தீர்வூகளுடன் சுகாதாரத் துறை மாற்றமடையும். தரம் மற்றும் திறனை மேலும் மேம்படுத்த உலகின் மிகவும் அபிவிருத்தியடைந்த மற்றும் வேகமான ஆம்புலன்ஸ் சேவையாக வகைப்படுத்தப்பட்ட '1990 சுவ சரிய' ஆம்புலன்ஸ் சேவைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கற்றுக்கொண்ட பாடங்கள் சேர்க்கப்படும்.