உற்பத்தி காரணி சந்தை சீர்திருத்தம்

பின் செல்ல
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

உற்பத்தி காரணி சந்தை சீர்திருத்தம்

இலங்கையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் காணி, தொழிலாளர் மற்றும் மூலதன சந்தைகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் உற்பத்தி காரணி சந்தை சீர்திருத்தங்களை நாங்கள் செயல்படுத்துவோம்.

காணி உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் காணி உரிமைகளை பாதுகாப்பதற்கும் தேசிய காணி சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்த எமது அரசாங்கம் உறுதியளித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 'பிம் சவிய' திட்டத்தை நிறைவு செய்து டிஜிட்டல் காணிப் பதிவைத் தயாரித்தல் முக்கிய முன்னுரிமையாக இருக்கும்.

மனித மூலதன மேம்பாட்டின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டு, கல்வி முடிவுகளை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புக்கான திறன்களை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்போம். போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களை உருவாக்க கல்வியின் தரம் மற்றும் நுழைவுகளை மேம்படுத்துவது முக்கியமானது. இலங்கையின் பணியாளர்களுக்கு எதிர்கால வேலைகளுக்கு ஏற்றதான திறன்கள் இருப்பதை உறுதிசெய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மூலதன ஓட்டத்தை அதிகரித்து உள்நாட்டு மூலதன சந்தையை வலுப்படுத்த துரித சீர்திருத்தங்களை செயல்படுத்துவோம். பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொண்டு தற்பொழுது செயற்படுகின்ற முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) மேம்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முக்கிய ஒழுங்குமுறைகள் மறுசீரமைக்கப்படும்.

இந்த அத்தியாயம்
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்