செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) இலங்கையில் மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (Research and Development) மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டிற்காக இலங்கையின் அரசு மற்றும் அரசு சாரா பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து பெறக்கூடிய வகையில், ஆண்டுக்கு ரூபாய் 5 பில்லியன் "அரசு ஆராய்ச்சி நிதி"யை அரசாங்கம் நிறுவும்.
வணிக ரீதியாக முக்கியமான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பல்கலைக்கழக மற்றும் வெளிப்புற இளம் ஆராய்ச்சிக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தொழில்முயற்சி ஆராய்ச்சி வசதிகள் நிலையம் (Business/Research Incubator) ஹோமாகம தொழில்நுட்ப நகரத்திற்கு அருகில் உருவாக்கப்படும்.
முன்னேறிய நாடுகளில் உள்ளது போல, பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பட்டத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் சிறந்த ஆராய்ச்சிகளை நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமான திட்டங்களாக செயல்படுத்தும் சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்படும்.
நாங்கள் நவீன தொழில்நுட்பத்துடனான 25 தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை நிறுவுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இந்த அத்தியாயம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்
இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை நிறைந்த தன்னார்வலர்களால் வடிவமைக்கப்பட்டது. பின்வரும் தகவல்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் 2024 தொடர்பான பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.